நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி -ஜெகன்மூர்த்தி உறுதி
AIADMK Alliance: தேசிய ஜனநாயக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை புரட்சி பாரதம் கட்சி வரவேற்கிறது. அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சியும் ஓர் அங்கம் வகிக்கும்.
சென்னை: பாஜக தலைமையிலான என்.டி.ஏ (NDA Alliance) கூட்டணியிலிருந்து விலகுவதாக நேற்று அதிமுக (AIADMK) அறிவித்தது. இதனையடுத்து அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்துள்ள புரட்சி பாரதம், அதிமுக கட்சியின் நிலைப்பாட்டை வரவேற்றுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் நேற்று (செப். 25) சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி முடிவுக்கு வருவதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த கூட்டத்தில் , 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, பாரதிய ஜனதா கட்சி உடனான கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் அதிமுக விலகிக்கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்நிலையில், இன்று புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி அவர்கள், அதிமுக தலைமையில் தனி கூட்டணி அமைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார். அதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
மேலும் பதிக்க - அதிமுக - பாஜக கூட்டணி முறிவு... அண்ணாமலையின் முதல் ரியாக்சன் இதுதான்!
அதில் கூறப்பட்டுள்ளதாவது,
தேசிய ஜனநாயக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை புரட்சி பாரதம் கட்சி வரவேற்கிறது. சமீப காலமாக திராவிட தலைவர்களையும், அதிமுக மாநாட்டையும் விமர்சித்து வந்த பாஜகவை கண்டித்து, தேசிய ஜனநாயக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது. அதிமுகவின் தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இயங்கி வரும் நிலையில், அவர்கள் எடுக்கும் முடிவிற்கு நாங்கள் உறுதுணையாக நிற்போம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி. பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சியும் ஓர் அங்கம் வகிக்கும் என்பதை கட்சியின் தலைவர் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் பங்கேற்று புரட்சி பாரதம் கட்சி தேர்தலை எதிர்கொள்ளும்.
என்.டி.ஏ மற்றும் இண்டியா என்று எந்த ஒரு கூட்டணியிலும் பங்கேற்காமல், அதிமுக தலைமையில் நாங்கள் தனி கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் பதிக்க - முறிந்தது அதிமுக - பாஜக கூட்டணி: இன்றும்... என்றும் இல்லை... இபிஎஸ் அதிரடி முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ