Annamalai On AIDMK - BJP Alliance Breaks: தேசிய அளவில் பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அதன் கட்சி தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டது.
அதிமுகவின் குற்றச்சாட்டு
இதனால், வரும் மக்களவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் கட்சியின் தலைவர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை பாஜக மாநில தலைமை கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து விமர்சித்தும் வருகிறது என தீர்மானத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக விமர்சனம் செய்யப்படுவதால் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய கூட்டணி
மேலும், இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்திற்கு பின் பேசிய அதிமுகவின் துணை பொதுச்செயலாளர், இனி இன்றும், என்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, வரும் மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் தனியாக புதிய கூட்டணி உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | முறிந்தது அதிமுக - பாஜக கூட்டணி: இன்றும்... என்றும் இல்லை... இபிஎஸ் அதிரடி முடிவு!
அண்ணாமலையின் ரியாக்சன்
இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி முறிவு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது கருத்து தெரிவித்துள்ளார். தற்போது கோவையில் 'என் மண், என் மக்கள்' பாத யாத்திரையில் இருக்கும் அண்ணாமலை இதுகுறித்து முதலில், பிறகு பேசுகிறேன். அரசியல் பேசுவதற்கான இடம் இது இல்லை" என்றார்.
#WATCH | Coimbatore | On AIADMK breaking alliance with BJP and NDA, Tamil Nadu BJP president K Annamalai says, "I will speak to you later, I don't speak during Yatra. I will speak later." pic.twitter.com/yObr5hSeT3
— ANI (@ANI) September 25, 2023
இதன்பின்னர் சற்று நேரம் கழித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,"கூட்டணி முறிவு குறித்து சரியான நேரத்தில் தேசிய தலைமை இது குறித்து பேசும். எதிர்காலத்தில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்திப்போம்" என தெரிவித்தார். இச்செய்தியாளர் சந்திப்பில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், எல்.முருகன் ஆகியோர் உடன் இருந்தார்.
#நன்றி_மீண்டும்_வராதீர்கள்
மறுபுறம், அதிமுகவின் இந்த அறிவிப்பு தொண்டார்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து அதிமுக அதன் ட்விட்டர் பக்கத்தில்,"...2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது" என குறிப்பிட்டு, #நன்றி_மீண்டும்_வராதீர்கள் என ஹேஷ்டேக் உடன் பதிவிட்டது. தற்போது அதிமுகவினர் இந்த ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து…
— AIADMK (@AIADMKOfficial) September 25, 2023
மேலும் படிக்க | 23ஆம் புலிகேசி போல் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது - பாஜக அண்ணாமலை விமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ