சென்னை டூ கத்தார் : விமானியின் சாமர்த்தியத்தால் தப்பித்த 146 உயிர்கள்... ஏர்போர்டில் பரபரப்பு
சென்னையில் இருந்து 139 பயணிகள், 7 பணியாளர்களுடன் தோகா புறப்பட்ட கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக ஓடுபாதையில் ஓடிய விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 3.20 மணிக்கு, கத்தார் நாட்டு தலைநகர் தோகாவுக்கு, கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு செல்வது வழக்கம். இந்த விமானம் தினமும் அதிகாலை 1:30 மணிக்கு தோகாவில் இருந்து சென்னை வந்துவிட்டு மீண்டும் புறப்பட்டு செல்லும். அதை போல் இன்று அதிகாலை 1:30 மணிக்கு தோகாவில் இருந்து சென்னைக்கு வந்தது.
இந்த விமானத்தில் தோகா செல்ல, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை, சுங்க சோதனை அனைத்தையும் முடித்துவிட்டு 139 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர். விமானம் வந்ததும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். அதன் பின்பு 139 பயணிகள், விமான ஊழியர்கள் 7 பேர் மொத்தம் 146 பேருடன் விமானம் புறப்பட தயாரானது.
அதிகாலை 3:50 மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்தார். விமானம் வானில் பறந்தால் பெரும் ஆபத்து என்பது உணர்ந்து உடனடியாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு, விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்திவிட்டார்.
மேலும் படிக்க | வலுத்த எதிர்ப்பு - பாடப்புத்தகத்திலிருந்து ரம்மி பாடப்பகுதி நீக்கம்
இதையடுத்து, இழுவை வண்டி மூலம் விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே எடுத்து கொண்டு வந்து நிறுத்தினர். விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு விமான பொறியாளர்கள் விமானத்திற்குள் ஏறி, பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், காலை 6 மணி வரை விமானத்தின் பழுது சீராகவில்லை.
இதையடுத்து விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும், விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு, விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமான பழுது பார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விரைவில் விமானத்தின் பழுதை சீர்செய்ய முடியவில்லை என்றால், பயணிகளை ஹோட்டல்களில் தங்க வைத்துவிட்டு, இன்று இரவு அல்லது நாளை அதிகாலை விமானத்தை எடுத்துச் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் 139 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து விமானம் வானில் பறப்பதற்கு முன்னதாகவே, எடுத்த துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, 7 பயணிகள் உள்பட 146 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ