தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதுரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கடந்த 2014 ஆம் ஆண்டு இவருக்கும் இவரது பக்கத்து வீட்டுக்காரர் கணபதிக்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் ஆக்கிரமடைந்த கணபதி மற்றும் அவரது மனைவி கருப்பாயி மகன்கள் ராமர் லட்சுமணன் கண்ணன் ஆகியோர் ராஜேந்திரனை அடித்தும் கத்தியால் குத்தியும் உள்ளனர். இதனை தடுக்க வந்த ராஜேந்திரனின் மனைவி பாண்டியம்மாளும் பலத்த காயமடைந்தார். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். 


மேலும் படிக்க: JOB Openings: ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தில் வேலை ரெடி: அப்ளை பண்ன நீங்க ரெடியா


இது சம்பந்தமாக நாவலாட்டின புதூர் போலீசார் கணபதி உட்பட ஐந்து பேரை கைது செய்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு எண் இரண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கணபதி மற்றும் அவரது குடும்பத்தினர் மும்பைக்கு தப்பி ஓடி விட்டனர். 


இதனை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் கணபதி தனது குடும்பத்துடன் மும்பையில் பதுங்கி வாழ்ந்து வந்தது குறித்து தகவல் கிடைத்து. தகவல் கிடைத்ததை அடுத்து மும்மை விரைந்த போலீஸார், கணபதி மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர்.


அதன்பின் குற்றம் சாட்டப்பட்ட கணபதி அவரது மனைவி கருப்பாயி மற்றும் மகன்கள் மூன்று பேர் உட்பட ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனையும் ரூபாய் 1000 அபராதமும் விதித்து நீதிபதி பிலிப்அலெக்ஸ் நிக்கோலஸ் தீர்ப்பளித்தார். மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் படிக்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா - உடனே இதை செய்யுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ