தமிழகத்தில் 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 12ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10 முதல் 12 வரை நடப்பதால் இந்த விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அக்டோபர் 6 முதல் 8 வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி என அறிவிக்கப்பட்டு அக்டோபர் 9 வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆ.ராசா, பொன்முடி சர்ச்சை பேச்சு - மௌனம் கலைத்த மு.க. ஸ்டாலின்



முன்னதாக, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9ம் தேதி வரையிலும் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரையிலும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.  


அரையாண்டு தேர்வு எப்போது? 


1 முதல் 10ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு டிசம்பர் 19ம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் என்றும், 11 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 16ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என்றும் ஏற்கனவே  அறிவிக்கப்பட்டது.



மேலும் படிக்க | 'தெலுங்கு பட அமைச்சர்கள்' - திமுக அமைச்சர்களை கலாய்த்த ஜெயக்குமார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ