1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று முதல் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீவிரமாக பரவிவரும் COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பாடு வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு நாடுகளில் சமூக இடைவெளி மற்றும் முழு ஊரடங்கு அமல் படுத்தபட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 


ALSO READ | இன்று முதல் இந்த மாநிலங்களில் பள்ளி 'மணி' ஒலிக்கும்... பெற்றோர் கவனத்திற்கு!!


இயல்பாக, பள்ளிகள் வழக்கம்போல நடைபெற்றிருந்தால் தற்போது காலாண்டு தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை வந்திருக்கும் எனபதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் இன்று முதல் 25 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் பள்ளிகள் ஆன்லைன் பாடங்கள் நடத்தக்கூடாது என்றும் பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.