திமுகவிடம் பணம் வாங்கியது உண்மைதான் - திண்டுக்கல் சீனிவாசனுக்கு முத்தரசன் பதிலடி
CPI R Mutharasan Reaction: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 கோடியும், மார்க்கிஸ் கட்சிக்கு 10 கோடியும், கொங்கு மக்கள் கட்சிக்கு 10 கோடியும் தேர்தலில் திமுக பணம் கொடுத்தது உண்மைதான்.
Tamil Nadu Latest News: திமுகவிடமிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பணம் வாங்கியது உண்மைதான் என்று கூறிய முத்தரசன் அதிமுகவுடன் கூட்டணி வர யார் கோடிக்கணக்கில் பணம் கேட்டது என்பதை திண்டுக்கல் சீனிவாசன் கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், "சீமான் என்ன பேசுகிறார் என்று அவருக்கே புரியவில்லை என்றும், சீமானின் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அவரின் பேச்சுக்களை விரும்பாமல் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். விஜயை முதலில் வரவேற்ற சீமான் தற்போது விமர்சனம் செய்து வருகிறார்" என்று முத்தரசன் தெரிவித்தார்.
அதிமுகவுடன் கூட்டணி வரவேண்டும் என்றால் 200 கோடி ரூபாய் பணம் கேட்பதாக திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார். அது எந்த கட்சி என்று துணிச்சல் இருந்தால் அவர் தெரிவிக்க வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்தார்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவிடம் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்ட முத்தரசன், இதில் பெரிய ரகசியம் ஒன்றுமில்லை என்று தெரிவித்தார். இது வங்கிக் கணக்குகள் மூலம் பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தில் திமுக கணக்கு கொடுத்துள்ளது என்று அவர் விளக்கம் அளித்தார்.
அண்ணா திமுகவோட கூட்டணிக்கு வா எனக் கூப்பிட்டால் ஒரு கட்சி 20 சீட்டும் மற்றும் 200 கோடி ரூபாய் பணமும் கேட்கிறாங்கள் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார். அவருக்கு துணிச்சல் இருந்தால் அது எந்த கட்சி என்பதை பகிரங்கமாக சொல்ல வேண்டும். 20 சீட்டு கேட்ட கட்சி எந்த கட்சி? 200 கோடி ரூபாய் பணம் கேட்டது எந்த கட்சி? என்று சொல்ல வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 கோடியும், மார்க்கிஸ் கட்சிக்கு 10 கோடியும், கொங்கு மக்கள் கட்சிக்கு 10 கோடியும் தேர்தலில் திமுக பணம் கொடுத்தது உண்மைதான். அதில் எந்த பெரிய ரகசியம் கிடையாது. தேர்தல் செலவுகளை மேற்கொள்ள திராவிட முன்னேற்றக் கழகம் சொன்ன தொகை அடிப்படையில் செலவு செய்திருக்கிறது என்பது உண்மைதான். இதைப்பற்றி கணக்கு விவரங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்திற்கு திமுக கொடுத்துள்ளது.
இந்த பணம் வங்கியின் மூலமாக பரிவரத்தனை செய்யப்பட்டு, செலவு செய்த பணம், அதுவும் தேர்தலுக்காக செலவழிக்கப்பட்ட பணம். இது எங்களுக்கா வாங்கிக்கொண்ட பணம் இல்லை. எனவே இது ஒன்னும் பெரிய ரகசியம் இல்லை. திண்டுக்கல் சீனிவாசன் உளறுகிறார் என்றால் அவரிடம் தான் நீங்கள் (செய்தியாளர்கள்) கேட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க - மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் - உதயநிதி சொன்ன முக்கிய விஷயம்
மேலும் படிக்க - தமிழில் எழுதப்படிக்கத் தெரியுமா? இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!
மேலும் படிக்க - நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.. ஆரம்பமே அதிரடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ