அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க ராகுல் காந்தி தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை வந்த ராகுல் காந்தி மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார். முதல்வருக்கு அளிக்கபடும் சிகிச்சை குறித்த தகவல்களை கேட்டறிந்தார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்றார்.


சில தினங்களுக்கு முன் திருநாவுக்கரசர் கூறியதாவது:- முதல்வர் குணமடைந்ததும் அனுமதி கிடைத்தால் அவரை நேரில் சந்தித்துப் பேசுவேன். நான் அதிமுக இளைஞரணிச் செயலாளராக இருக்கும்போது அவர் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். எனவே, தனிப்பட்ட முறையிலும், தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையிலும் அவரை சந்திப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை" எனக் கூறியிருந்தார்.