கன்னியாகுமரி மாவட்டம் கரிசல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ் வயது 41. இவர் தாம்பரம் பகுதிகளில் தங்கி சமையல் வேலை செய்து வருகிறார். சமையல் வேலை முடித்து சொந்த ஊருக்கு செல்ல ரயில் ஏறி உள்ளார். அப்போது குளிர்சாதன பெட்டியில் தவறுதலாக ஏறியவர் ரயில்வே டிடிஆர் அறிவுரையின் பேரில் வேறு பெட்டிக்கு செல்ல தயாரான போது ரயில் புறப்பட்டு விட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 உடனே ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற போது தவறி ரயில்வே பிளாட்பாரத்தில் ரயிலுக்கு அடியில் சிக்கினார். இவரை கடந்து நான்கு பெட்டிகள் சென்ற நிலையில் அங்கிருந்தவர்கள் பார்த்து ரயில் ஓடும் ரயிலை நிறுத்தி நிறுத்தி உள்ளனர் .


மேலும் படிக்க | வயசாச்சுனா லவ் பண்ணகூடாதா...பாக்கியலட்சுமி கோபி கவலை!



அதன் பிறகு காவல்துறையினர் அவரை ரயிலை மெல்ல நகர்த்தி அடியில் சிக்கிக்கொண்ட அந்தோணிராஜ் லாவகமாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் வழக்கமாக ஆறாவது நடைமேடையில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. 


போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. அவரை மீட்ட ரயில்வே போலீசார் தோளில் சுமந்து வந்து 108 அவசர ஊர்தியில் ஏற்றும் அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது தொடர்ந்து இந்த காவலர், இதுபோன்ற பணியில் ஈடுபட்டு வருவதால் ரயில் நிலையத்தில் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளார்.


மேலும் படிக்க | புஷ்பா-2 படத்தில் ராஷ்மிகா இல்லையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR