ரயில் டிக்கெட்டுகளில் லோயர் பெர்த் வேண்டுமா? IRCTC வெளியிட்ட புதிய விதி!

லோயர் பெர்த் மூத்த குடிமக்கள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கானது, கீழ் பெர்த்கள் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கானது என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 9, 2022, 06:15 AM IST
  • ரயிலில் பல சமயங்களில் நாம் கேட்ட பர்துகள் கிடைப்பதில்லை.
  • ரயில் டிக்கெட்களில் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை உள்ளது.
  • கொரோனா காலத்தில் இது தடை செய்யப்பட்டு இருந்தது.
ரயில் டிக்கெட்டுகளில் லோயர் பெர்த் வேண்டுமா? IRCTC வெளியிட்ட புதிய விதி! title=

ரயில் பயணம் மற்ற வழித்தட பயணங்களை காட்டிலும் சௌகரியமானதாக கருதப்படுகிறது, ஏதேனும் சுற்றுலா செல்ல வேண்டியிருந்தாலோ அல்லது குறிப்பிட்ட நாளில் நீங்கள் வேறெங்கும் செல்ல வேண்டியிருந்தாலோ ரயிலில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து உங்களுக்கான இருக்கையை உறுதி செய்துகொள்ளலாம்.  அவ்வாறு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது மூத்த குடிமக்கள் பலர் கோரிக்கை விடுத்தும் பல நேரங்களில் கீழ் பெர்த் கிடைப்பதில்லை.  இதுகுறித்து எழுந்த புகார்களின் அடிப்படையில் தற்போது இந்திய ரயில்வே இதுபற்றி ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ITR Filing முக்கிய அப்டேட்: இந்த தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால் அதிக அபராதம்

இந்திய ரயில்வேயில் பயணிக்கும் பயணி ஒருவர் ட்விட்டரில் ரயில்வேயிடம் ஒரு கேள்வியைக் கேட்டார், அவர் கேட்கையில், இருக்கை ஒதுக்கீட்டை நடத்துவதில் என்ன லாஜிக் இருக்கிறது, மூன்று மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் முன்னுரிமையில் டிக்கெட் புக் செய்திருந்தேன்.  அப்போது 102 பெர்த்கள் இருந்தன, ஆனால் மிடில் பெர்த் தான் கிடைத்தது.  இதனை நீங்கள் சரிசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.  இந்தக் கேள்விக்கு ட்விட்டரில் பதிலளித்த ஐஆர்சிடிசி, லோயர் பெர்த் மூத்த குடிமக்கள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கானது, கீழ் பெர்த்கள் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கானது,  இரண்டுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் அல்லது ஒருவர் மூத்த குடிமகன் மற்றும் மற்றவர் மூத்த குடிமகன் இல்லை என்றால், அதை அமைப்பு கருத்தில் கொள்ளாது என்று ஐஆர்சிடிசி கூறியுள்ளது.

மேலும், 2020 ஆம் ஆண்டில், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைக்க மூத்த குடிமக்கள் உட்பட பல வகை மக்களின் சலுகை டிக்கெட்டுகள் நிறுத்தப்பட்டது.  கொரோனா வைரஸால் இறப்பு ஆபத்து அதிகமாக இருந்ததால், மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | HDFC Bank வாடிக்கையாளர்களுக்கு ஷாக்: இன்று முதல் இந்த புதிய விதி அமல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News