தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடகிழக்கு பருவமழை நேற்று முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மழை மேலும் 4 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்தார்.


அந்த வகையில் இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் கோடம்பாக்கம், மீனம்பாக்கம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், பல்லாவரம் அனகாபுத்தூரிலும் கனமழை பெய்தது. ஆலந்தூர், மடிப்பாக்கம், துரைப்பாக்கம் அடையாறு வேளச்சேரியில் கனமழை பெய்து வருகிறது.


இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில், வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு  உள்ளது. தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்யும். மேலும் வடகிழக்கு பருவ மழை ஜனவரி 5 வரை தொடரும் என கூறினார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.