மழை இன்னும் இருக்கிறது - வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கும் அலெர்ட்
தமிழ்நாட்டில் மழை குறித்த அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இன்னும் மூன்று நாள்களுக்கு மழை இருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தமிழர்களின் வீடுகளை அகற்றுவதா?... கேரள அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
மேலும் படிக்க | இலவச பேருந்து பயணத்தால் பெண்களுக்கு எவ்வளவு மிச்சம் தெரியுமா?... ஆய்வில் தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ