சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.  இந்நிலையில், நேற்று முழுவதும் மழை கொட்டி தீர்த்த நிலையில், பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.  நேற்று இரவு முழுவதும் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டி தீர்த்த நிலையில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி இருந்தது.  இந்நிலையில், சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மேலும், காஞ்சிபுரத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவிப்பு விடுத்துள்ளார். செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களிலும் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழகத்தில் தொடரும் கன மழை! பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!


சென்னை பெங்களூர் நெடுஞ்சாலை சென்னீர்குப்பம் பகுதியில் தேங்கியிருக்கும் மழை வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் சாலைகளில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, மேலும் பூந்தமல்லி நகராட்சியில் இருந்து கழிவுநீர் வெளியேறும் முக்கிய பாதையாகவும் சென்னீர் குப்பம் பைபாஸ் சாலை உள்ளதால் அங்கு மழை நீர் வெள்ளம் போல் காணப்படுகிறது. இந்நிலையில் தேங்கியுள்ள மழை வெள்ளத்தை அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கொட்டும் மழையிலும் தீவிரமாக ஈடுபட்டனர்.  


மீனம்பாக்கத்தில் கடந்த 73 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது என தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  சென்னை வானிலை மைய அலுவலகத்தில், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடலில்  வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். அப்போது பேசியவர்,  தென்மேற்கு மற்றும் அதை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடலில்  வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவை காரைக்கால் மற்றும் ஒரு சில இடங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.  தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதியில் அனேக இடங்களிலும், அடுத்து வரும் இரு தினங்களுக்கு 20, 21 தினங்களில் ஒரு சில இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை பொருத்தவரை தமிழக கடற்கரை பகுதிகள் குமரி கடல் தென்மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசப்படும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதியில் அடுத்து வரும் எனது தினங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்து வரும் 24 மணி நேரங்களில் மழை தொடரும், ஒரு சில பகுதிகளில் கனமழையாக இருக்கக்கூடும். மீனம்பாக்கத்தில் கடந்த 73 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. முன்னதாக 1996 ஆம் ஆண்டு 282.2 மில்லி மீட்டர்  பதிவாகி இருக்கிறது. தற்போது 158.2 மில்லிமீட்டர் பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 16 சென்டிமீட்டர் வித்தியாசம் உள்ளது. 


நுங்கம்பாக்கத்தை பொறுத்தவரையில் கடந்த 73 வருடங்களில் மூன்றாவது அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. 1996 ஆண்டில்  347.9, மில்லி மீட்டர், 1991இல் 191.9 மில்லி மீட்டர் தற்போது 84.7 மழை பதிவாகியுள்ளது. இந்த மாதத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை என்பது கடந்த ஒன்று முதல் இன்று வரை தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் இயல்பு மழையளவு 34.4 மில்லிமீட்டர். ஐந்து தினங்களாகவே மழை இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறோம், மேலும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவித்திருக்கிறோம், சென்னைக்கு தொடர்ந்து மழைப்பொழிவு இருக்கும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது, வளிமண்டல மேலடுக்கு சூழற்ச்சி காரணமாக மழைப்பொழிவு வேறுபடும் என தெரிவித்தார்.


மேலும் படிக்க | Rain Alert: இதென்ன அதிசயம்..! சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கனமழை..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ