தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Cheif Minister MK Stalin) பதவியேற்ற நாள் முதல் பல அதிரடிகளை செய்து வருகிறார். அந்தவகையில் தமிழக மின்வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 


ALSO READ | சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி IAS நியமனம்


இதுதொடர்பாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார். இந்தப் பொறுப்பில் ஏற்கெனவே பணியாற்றி வந்த பங்கஜ் குமார் பன்சாலுக்குப் பதிலாக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.



ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ் பல்வேறு அரசு பணிகளில் அவர் பணியாற்றி உள்ளார். ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மை செயலராக அவர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR