ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவோ, ஆதரவாகவோ வாக்கு சேகரிக்கக் கூடாது என ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூடாது என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் யாருக்கும் ஆதரவாக வாக்குசேகரிக்கவும் கூடாது எனவும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை' எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 16 ஆம் தேதி ஆகும். இதையடுத்து 17 ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்ப பெற வரும் 19 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. அதனால் ரஜினிகாந்தின் பெயரையோ, புகைப்படத்தையோ தேர்தலில் யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும், ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர், கொடியைப் பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே ரஜினி மக்கள் மன்றம் அறிவித்திருந்தது. 


இதை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் சிலர் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டிருந்ததால், திருச்சி ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவோ, ஆதரவாகவோ வாக்கு சேகரிக்கக் கூடாது என ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்....... "மாநில தலைமையின் உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தின் மாநகர, ஒன்றிய, நகர பகுதிகளில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தில் சார்பில் யாரும் போட்டியிடவோ, யாருக்கும் ஆதரவாக வாக்கு சேகரிக்கவோ கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.