கரூர் போக்சோ வழக்கில் பிரபல மருத்துவர் ரஜினிகாந்த் கைது
கரூரில் போக்சோ வழக்கில் தலைமறைவான மருத்துவரை மாவட்ட மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாணவியின் தற்கொலை வழக்கின் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே மீண்டும் ஒரு சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது கரூரில் தனது மகளை பிரபல டாக்டர் பாலியல் தொந்தரவு செய்ததாக அளித்திருந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பிரபல மருத்துவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கரூரைச் (Karur) சேர்ந்த பிரபல மருத்துவர் ஜெ.ரஜினிகாந்த் ஆவார். இவர் கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனை (Hospital) நடத்தி வருகிறார். இங்கு மேலாளராக பணியாற்றி வந்தவர் சரவணன் (55). அதே மருத்துமனையில் பெண் ஒருவரும் பணியாற்றி வந்தார்.
ALSO READ | இனி இரவு நேரத்திலும் பிரேதப் பரிசோதனை செய்யலாம்: மத்திய அரசு
இந்த நிலையில், கடந்த 13 ஆம் தேதி தீபாவளி போனஸ் மற்றும் புத்தாடையைப் பெற்றுக்கொள்ள அந்தப் பெண்ணின் 17 வயது மகளுக்கு மருத்துவர் ரஜினிகாந்த் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி அழைப்பு விடுத்ததாகவும், மேலாளர் சரவணனும் அச்சிறுமியை போனில் அழைத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற சிறுமிக்கு டாக்டர் ரஜினிகாந்த் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்பட்டது.
இது குறித்து அச்சிறுமி தாயிடம் தெரிவித்ததை அடுத்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அப்புகாரில் தான் வேலை பார்க்கும் மருத்துவமனையின் மருத்துவர் நேற்று மாலை தனது மகளை அவரது அறையில் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதுபற்றி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தூர்பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மாணவியியை மருத்துவமனை மேனேஜர் மூலம் அழைத்துச் சென்று டாக்டர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் டாக்டர் ரஜினிகாந்த், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மருத்துவமனை மேலாளர் சரவணன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலாளர் சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில் மருத்துவர் ரஜினிகாந்த் தலைமறைவானார் தொடர்ந்து தனிப்படை அமைத்து தேடிவந்த காவல்துறையினர் கோவையில் அவர் பதுங்கியிருபிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து நேற்று இரவு அங்கு சென்ற தனிப்படை போலீசார் மருத்துவர் ரஜினிகாந்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மருத்துவர் ரஜினிகாந்தை கரூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் 15 நாள் நீதிமன்றகாவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
ALSO READ | பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு; பெண் எஸ்.பி நேரில் ஆஜராகி சாட்சியம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR