நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் (Rajinikanth) நடிக்கும் அண்ணாத்த (Annaatthe) படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா (Coronavirus) பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து. இதனால் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.


ALSO READ | ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: காரணம் இதுதான்


இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் (Apollo Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அப்பல்லோ நிர்வாகம், கொரோனா குறித்து எந்த அறிகுறியும் ரஜினிகாந்த்திற்கு இல்லை என்றும், ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ரத்த அழுத்தம் சீராகும் வரை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார். 


ALSO READ | Rajini in Politics: என் உயிரே போனாலும் மக்களின் நலனே முக்கியம் - ரஜினிகாந்த்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR