சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெய்லர் திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை வாரிக் குவித்திருப்பதால் ஒட்டுமொத்த படக்குழுவுமே மகிழ்ச்சியில் உள்ளது. இதனால் நடிகர் ரஜினிகாந்தும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற அவர், உத்தரப்பிரதேச முதலமைச்சர் மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார்.  ஆனால், அதில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழுந்தது சமூகவலைதளங்களில் பேசுபொருளானாது. அவருக்கு வயது 51 ஆகும் நிலையில் ரஜினிகாந்துக்கு 72 வயதாகிறது. தன்னைவிட மிக மிக இளம் வயதுடையவரின் காலில் ரஜினிகாந்த் விழலாமா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சென்னை திரும்பியவுடன் பதில் அளித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், யோகிகள் மற்றும் சன்னியாசிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம் என கூறினார். 


மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: சுபாஷ்க்கு சொப்னா கொடுத்த அதிர்ச்சி.. காத்திருக்கும் பெரிய ட்விஸ்ட்



ஆன்மீகப் பயணம் முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையம் வந்த அவரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான்கு வருடங்களுக்குப் பிறகு  இமயமலை சென்றுள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஜெய்லர் திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக மாற்றிய என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை ஒரு நல்ல படத்தை உருவாக்குங்கள் என உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அனைத்து காட்சிகளையும் ரசித்து ரசித்து எடுத்த இயக்குனர் நெல்சன், பின்னணி இசையின் மூலம் படத்தை மாபெரும் வெற்றிக்கு கொண்டு சென்ற அனிருத், தொழில்நுட்ப கலைஞர்கள் உடன் நடித்த நடிகர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.


உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த விவகாரம் சர்ச்சை ஆகியது குறித்து கேட்டதற்கு, யோகி, சன்னியாசி ஆனவர்கள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் கூட அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது என்னுடைய பழக்கம். சந்திராயன் 3 நிலவில் இறங்குவது குறித்து கேட்டதற்கு அதைப் பற்றி எனக்கு தெரியவில்லை என பதில் அளித்தார். மேலும் பேசிய ரஜினிகாந்த், அரசியலைப் பற்றி நான் பேச விரும்பவில்லை என தெரிவித்தார்.


மேலும் படிக்க | சூப்பர்ஸ்டார் என்றாலே ரஜினி தான்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ