திருப்பத்தூர் மாவட்டம் ஆதனூரில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு ஆசிரியர் ஒருவர் ரெக்கார்டு நோட்டை சமர்ப்பிக்குமாறு கூறியதற்கு சில மாணவர்கள் செய்யவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் அவர்களை ஆசிரியர் கண்டித்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த மாணவர்களில் ஒருவர் ஆசிரியரை தகாத முறையில் பேசி தாக்க முயன்றார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த மாணவர் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.


மேலும் படிக்க | குற்றவாளிகளை பிடிக்கும் போது துப்பாக்கிகளை வைத்துக்கொள்ளலாம்! கோவை எஸ்.பி. அதிரடி உத்தரவு!


இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரையடுத்த மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ரெக்கார்ட் நோட் எழுதாததற்காக கண்டித்த ஆசிரியரை மாணவர் ஒருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயலும் காணொலி வேகமாக பரவி வருகிறது. இந்த நிகழ்வு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.


 



தாய், தந்தையருக்குப் பிறகு மாணவர்கள் வாழ்வில் ஆசிரியர்கள் தான் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் தான் மாணவர்களை கரை சேர்க்கும் ஓடங்கள். கடவுளாக மதிக்க வேண்டியவர்களையே திட்டி, தாக்க முயலும் அளவுக்கு சில மாணவர்களிடம் ஒழுக்கக்கேடு ஏற்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.


 



திரைப்படங்களில் ஆசிரியர்கள் தவறாக சித்தரிக்கப்படுவதும், சமூகச் சூழலும் தான் இதற்கு காரணம் ஆகும். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். பள்ளிகளில் பாடங்களுக்கு இணையாக நீதி போதனைகளுக்கும், ஒழுக்க போதனைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க | அரியவகை சுண்டெலி மான்: வைரலான வீடியோ..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR