ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐஎன்எஸ் பருந்து விமானப்படை தளத்தில் 41 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் கோவிட் 19 பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனையில் 35 வீரர்களுக்கு தொற்று இருப்பது தற்போது வரை கண்டறியப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக உயர்ந்துள்ளது. 


 


READ | COVID-19-னை குணப்படுத்தும் என கூறப்பட்ட கொரோனில் மாத்திரை தடை செய்யப்படலாம்...


 


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,865 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 91 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எனிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது.


இதற்கிடையில் ராமநாதபுரத்தில் விமானப்படை வீரர்கள் 35 பேர் உள்பட 90 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. 35 வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 35 வீரர்கள் உள்பட 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 635-ஆக உயர்ந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 301 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.