திருமணம் உள்ளிட்ட வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும் பேனர் அடிக்கும் கலாசாரம் தமிழகத்தில் பல ஆண்டுகளாக வழக்கதில் உள்ளது. சிலர் அவர்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் படங்களை, அவர்களுக்கு பிடித்த கடவுள் படங்களை, ஏன் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை வைத்தும் பேனர் அடிப்பார்கள்.  கடந்த சில ஆண்டுகளாக பேனரில் எழுதப்படும் வசனம் பலரது கவனத்தை ஈர்க்க வேண்டும் என வித்தியாச வித்தியாசமான வசனங்களை எல்லாம் போடுவார்கள். அதிலும் கட் அவுட்டுகளில் மணமக்களின் நண்பர்களின் மனக்கோட்டைகளில் மலர்ந்த வசனங்களுக்கு எல்லையே இல்லை என கூறலாம். அந்த வகையில் ராமநாதபுரத்தை சேர்ந்த மணமக்கள் நவீன்ராஜ், லாவண்யா திருமணம் அரண்மனை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.‌


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிகழ்ச்சியில் மண்டபத்திற்கு வெளியே மணமகனின் நண்பர்கள் வைத்திருந்த பேனர் சமூகவலைதளங்களில் வைரலாகி நகைப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பேனரில் மணமக்கள் புகைப்படத்திற்கு கீழ் ஜாதக வடிவில் மணமகனின் நண்பர்கள் தங்கள் புகைப்படம், பெயர், ராசி மற்றும் நட்சத்திரத்தை குறிப்பிட்டு "கல்யாணத்துக்கு வாங்க அடுத்த மாப்பிள்ளைங்க நாங்க" என்ற வசனத்துடன் பேனர் வைத்துள்ளனர்.  இந்த பேனரை திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், ஒரு நிமிடம் நின்று பேனரை பார்த்து புன்னகைத்து சென்றனர். 



மேலும் படிக்க | 2 குழந்தைகளை கிணற்றில் வீசிகொன்று தாய் தற்கொலை


அதே நேரத்தில் 80 மற்றும் 90களில் பிறந்து இன்று வரை திருமணம் ஆகாமல் உள்ள அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இந்த பேனரில் என்னோட போட்டோவையும் சேர்த்து போட்டிருக்கலாம் என உச் கொட்டியபடி பார்த்து கடந்து சென்றது பார்ப்பதற்கு பரிதாபமாகவும், வேடிக்கையாகவும் இருந்தது.  நண்பர்களுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு வகையில் வரவேற்பு பேனர் அடித்து வைத்து தங்களின் அன்பை வெளிப்படுத்தும் நிலையில், நண்பருக்கு வாழ்த்து சொன்ன மாதிரியும் தங்களுக்கு பெண் கேட்ட மாதிரியும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ள இந்த இளைஞர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.


மேலும் படிக்க | Shocking Video: சாலையில் உருண்டோடிய ஆட்டோ; சிதறி விழுந்த பயணிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ