தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளி ஒருவரின் திருமணத்தை நடத்தி வைக்க பரமக்குடிக்கு வருகை தந்த சிங்கப்பூர் முதலாளிக்கு தமிழரின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமணம்:


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள செய்களத்தூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் செல்லமீனாள் தம்பதியிரின் மகன் காலைவாணன் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.


இந்நிலையில், காலைவாணணுக்கும் பரமக்குடி அருகே உள்ள அருங்குளம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தவல்லி என்ற பெண்ணுக்கும் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இவர்களது திருமணம் பார்த்திபனூரில் இன்று நடைபெற்றது.


முதலாளிக்கு உற்சாக வரவேற்பு:


கலைவாணன் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் தனது முதலாளி தனது திருமணத்திற்கு வருகை தந்து திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என அவரிடம் கேட்டுக் கொண்டு சிங்கப்பூரை சேர்ந்த ஸ்டீபன் லீ குவான்க்கு அழைப்பு விடுத்திருந்தார்.


இதனையடுத்து இன்று பார்த்திபனூரில் நடைபெற்ற  காலைவாணன் திருமணத்திற்கு  சிங்கப்பூரை சேர்ந்த காலைவாணன் முதலாளி வருகை தந்தார் பின் அவரை வரவேற்கும் விதமாக ட்ரம்ஸ் செட் வைத்தும்,பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் தமிழர்களின் பாரம்பரியபடி உற்சாகமாக வரவேற்பளித்தனர். 


பின்னர்,  திருமாங்கல்யத்தை தனது கையால் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார் பின் தமிழர்களின் கலாச்சாரம் உபசரிப்பு இதுவரை நேரில் பார்த்ததில்லை வித்தியாசமாகவும் வியப்பாகவும் உள்ளது என பாராட்டினார்.


மேலும் படிக்க | தாயின் தகாத உறவு, மகளிடம் அத்து மீறல்: தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ