இருளில் தவித்து வந்த இருளர் இன மக்கள் - சொந்த நிதியிலிருந்து கரம் நீட்டிய கலெக்டர்
ராணிப்பேட்டையில் பல ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தவித்து வந்த இருளர் இன குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தனது சொந்த நிதியிலிருந்து மின் இணைப்பு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்துள்ள அத்தியானம் கிராமம். இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் பல ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் இருளில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்களிடம் இதுகுறித்து தெரியப்படுத்தினர்.
தகவலின் பேரில் உடனே கிராமத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் கூடிய விரைவில் மின்சார இணைப்பு கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். அதன் பேரில் அவரின் கள ஆய்வுக்கு பின்னர் மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் அதற்கான வைப்புத்தொகையை கட்ட வசதி இல்லாமல் 19 இருளர் இன குடும்பங்கள் ஏக்கத்தில் மூழ்கி போனது.
இதுகுறித்து தெரியவர இருளர் மக்களின் நிலையை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மின் இணைப்பிற்காக ஒரு குடும்பத்திற்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம், 19 குடும்பங்களுக்கு 57ஆயிரம் ரூபாய் பணத்தை தனது மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து வழங்கினார்.
மேலும் படிக்க | மாணவிகளுக்கு ரூ.1000: திமுக அரசு அதிரடி..!
இதனால் பல ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தவித்து வந்த இருளர் இன குடும்பங்களின் வாழ்க்கை தற்போது பிரகாசமானது.
மேலும் படிக்க | இலங்கையிலிருந்து தப்பித்த சிறை கைதிகள் - தமிழகத்திற்கு உளவுத்துறை எச்சரிக்கை..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR