மது போதையில் சுற்றுச்சுவர் மீது காரை மோதிய இளைஞர்!
ராசிபுரம் அருகே மது போதையில் அதிவேகமாக காரை இயக்கி வீட்டில் சுற்றுச்சுவர் மீது மோதி விபத்து ஏற்படுத்திய இளைஞர்.
ராசிபுரம் அருகே மது போதையில் அதிவேகமாக காரை இயக்கி வீட்டில் சுற்றுச்சுவர் மீது மோதி விபத்து ஏற்படுத்திய இளைஞர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர். நடந்தது என்ன? போலீஸ் விசாரணை.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன்(34) இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு இயக்கி வருகிறார்.இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சரத்குமார்(29) இளைஞர் தாமரைக் கண்ணனிடமிருந்து காரை வாங்கிக்கொண்டு மது போதையில் அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
மேலும் படிக்க | திமுகவில் இருந்தவர் திருமாவளவன், விசிக கூட்டணி உறுதி - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
அப்போது சாலையில் வளைவில் அதிவேகமாக காரை திரும்பிய சரத்குமார் கட்டுப்பாட்டை இழந்து முருகேசன் என்பவரது வீட்டிற்குள் கார் மோதி விபத்துக்குள்ளானது.இதில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது இதில் வெளியே படுத்திருந்த முருகேசன் மற்றும் குழந்தையும் ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.பின்னர் விபத்து ஏற்படுத்திய இளைஞர் சம்பவ இடத்திலிருந்து காரை விட்டுவிட்டு தப்பி ஓடினார்.பின்னர் ராசிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | கோவை: நகைக்கடை கொள்ளையில் டிவிஸ்ட்... பணம், நகைகளை சுருட்டிய தங்கை கணவர்.!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ