இறந்தவர்களின் பெயர் மற்றும் ஊரை விட்டு சென்றவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்காததே சென்னையில் வாக்கு சதவிகிதம் குறைந்து காணப்படுவதற்கு காரணம் என அமைச்சர் மா சுப்பிரமணியன் திமுக ஆலோசனை மேடையில் பேசியுள்ளார். சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள தனியார் இடத்தில் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு திமுக சார்பில் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழா மாற்று கழக பவளவிழா எவ்வாறு சிறப்பாக நடைபெற வேண்டும் என்று மாவட்ட, பகுதி, வட்டம் சார்பில் வருகை தந்துள்ள நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது - ஆர் எஸ் பாரதி!


இந்நிகழ்வில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ் உள்ளிட்ட சட்டமன்ற உழுறுப்பினர்களும், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மேடையில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், வாக்காளர் பட்டியலில் இறந்தவகளின் பெயர்கள் மற்றும் இருப்பிடத்தை விட்டு வெளியே சென்றவர்கள் உள்ளிட்டோர் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது, அதை பிஎல்ஓ 2-வாக செயல்படுவார்கள் கவனித்து தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத நபர்களின் பெயர்களை நீக்க வேண்டும். 


அப்படி பெயர்கள் நீக்க கொடுத்தும் நீக்க படவில்லை என்றால் நீக்கப்பட வேண்டிய பெயர் பட்டியலை என்னிடத்தில் கொடுங்கள் நான் சென்னைக்கு தேர்தல் அதிகாரியான சென்னை மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்து தேவையற்ற பெயர்களை நீக்குகிறேன் என்றார். மேலும் தேர்தல் முடிவுகளில் சென்னை பகுதிகளில் பதிவான வாக்கு சதவிகிதம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. காரணம் இறந்தவர்களின் பெயர்கள், ஊரை விட்டு வெளியே சென்றவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாமல் இருப்பதால் தேர்தலின் முடிவில் சென்னை வாக்கு சதவிகிதம் குறைந்து மக்கள் வாக்களிக்கவில்லை என்ற பிம்பம் உருவாகிறது என்றார்.


சென்னையில் வாக்கு சதவீதம்


தமிழ்நாட்டின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது சென்னையில் வாக்கு சதவிகிதம் குறைவாகவே இருந்து வருகிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தல் வாக்குபதிவில் சென்னை சென்ட்ரல் தொகுதி தமிழ்நாட்டில் மிகக் குறைந்த வாக்குப்பதிவை பதிவு செய்தது. இத்தொகுதியில் காலை 11 மணிக்கு 24.09 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 32.31 சதவீதமும், மதியம் 3 மணிக்கு 41.47 சதவீதமும், இரவு 7 மணிக்கு 67.35 சதவீதமும் வாக்குகள் பதிவானது. தேர்தல் நாள் அன்று காலை 11 மணி வரை சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில் 20% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. 


மேலும் படிக்க | இவர்கள் இல்லை என்றால் நான் காலிப்பையனாக போயிருப்பேன் - துரை முருகன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ