தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று திருப்பரங்குன்றத்தில் உள்ள பசுமலை பகுதியில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கட்சி தொண்டர்கள் மதிய உணவு வழங்கினார்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறுகையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோவினால் அவரின் அமைச்சர் இலாகா மாற்றப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, பல்வேறு வகையான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை நம்ப வைத்தார்கள். இந்த இரண்டு ஆண்டு ஆட்சியில் தொடர்ந்து சண்டை சச்சரவு ஆளுநரிடம் மோதல் என்று நீண்டு கொண்டே செல்கிறது. திமுக அமைச்சரவையில் உள்ள நிதி அமைச்சரே 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று ஆடியோ மூலம் குறிப்பிட்டுள்ளது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Minister TRB Raja: அமைச்சராக பொறுப்பேற்றார் டிஆர்பி ராஜா


எப்படி பேபி சக்ரமில் மீனா அவர்களின் ஆடியோ இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோ அது போன்று இவரின் ஆடியோவும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இதை திசை திருப்பவே இலக்கா மாற்றம் அமைச்சர் மாற்றம் என்று செய்துள்ளனர் இது தமிழக மக்களிடையே எந்த ஒரு நற்பெயரையும் ஏற்படுத்தாது. மு க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசியதும் ஆனால் தற்போது ஆளுங்கட்சியான பிறகு செய்வதும் முன்னுக்கு முரணாக உள்ளது.  டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இணைந்து துரோகி எடப்பாடி பழனிசாமி ஒழிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர் குறித்த கேள்விக்கு, எடப்பாடி பழனிச்சாமி தன்னை பொதுச் செயலாளர் ஆக்குங்கள் என்று யாரிடமும் சென்று கேட்கவில்லை, அவரை பொதுச் செயலாளராக ஒன்றரை கோடி தொண்டர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தான் அவரை பொதுச் செயலாளராக நியமித்தனர்.
சட்டமன்றம், மக்கள் மன்றம், நீதிமன்றம் அனைத்துமே எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் பொதுச் செயலாளர் என்று கூறிவிட்டார்கள். அவர்களை தவிர ஓர் இரண்டு பேர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அதை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று பேசினார்.


இன்று தமிழக அமைச்சர்கள் சிலர் மாற்றப்பட்டனர். துறை மாற்றம் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவரது அதிகாரப்பூர்வ பக்கத்தில் டீவிட் ஒன்றை பதிவிட்டார். அதில், தனக்கு முன் அனுபவம் உள்ள துறையான தகவல் தொழில்நுட்பத்துறையை தற்போது ஒதுக்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், துறை மாற்றம் செய்யப்பட்ட சக அமைச்சர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.   அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பின்வருமாறு: "கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும். முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட்டையும் ('21 - '22), பெருந்தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டு பட்ஜெட்டுகளையும் ('22 - '23, '23 - '24) சமர்ப்பித்துள்ளேன். முந்தைய ஆட்சியின் விளைவாக உட்சபட்ச பற்றாக்குறை மற்றும் கடன் விகிதங்களைப் பெற்றிருந்த போதிலும், நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூக நலத் திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் முதலீடு செய்துள்ளோம். இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான பகுதியாகக் கருதுகிறேன்" என்றார்.


மேலும் படிக்க | TN Cabinet: அமைச்சரவையில் அதிரடி மாற்றம் - நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து பிடிஆர் விடுவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ