Tamil Nadu Rain Weather Latest News Updates: வங்கக்கடலில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இந்நிலையில், வரும் நாள்களில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழைக்கா வாய்ப்பு இருக்கும் நிலையில், தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளரை சந்தித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது பேசிய அவர்,"ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. இன்று மாலை தாற்காலிக புயல் (Temporary Cyclone) உருவாகும். எதிர்காற்று இருந்ததால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வேகம் குறைந்ததன் காரணமாகவே நேற்று முதல் மழை இல்லை.


எங்கு கரையை கடக்கும்?


மேலும், இது தற்காலிக புயலாக இருக்கும் என்றும் வலுவாக புயலாக உருவாக வாய்ப்பில்லை. இந்த தற்காலிக புயலானது வரும் நவ.30ஆம் தேதி இந்த தற்காலிக புயல் (Fengal Cyclone) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும். குறிப்பாக, மாமல்லப்புரம் - காரைக்கால் இடையே, புதுச்சேரி அருகே இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும். கரையை கடக்கும்போது 50-60 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, டெல்டா மாவட்டங்களிலும், கடலூரிலும் நாளை (நவ. 29) கனமழைக்கான வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று இரவில் இருந்து மழைக்கான வாய்ப்புள்ளது." என்றார்.



மேலும் படிக்க | இளைஞர்களை தொழிலதிபர்கள் ஆக்கும் சூப்பர் திட்டம் - ரூ.5 கோடி வரை கடனுதவி


தற்காலிக புயல் என்றால் என்ன?


வளிமண்டலத்தின் நகரும் வேகம் வேறாக இருக்கும், அதே நேரத்தில் உட்பக்க சுழற்சியின் வேகம் வேறாக இருக்கும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று 12 கி.மீ., வேகத்தில் இருந்து படிப்படியாக குறைந்து காணப்பட்டது. இதனாலேயே புயல் உருவாக தாமதம் ஏற்பட்டது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது அதன் உட்பக்க சுழற்சியின் வேகம் 28 முதல் 33 நாட்ஸ் ஆக இருக்கும். அதேநேரத்தில் புயலின் வேகம் 34 - 47 நாட்ஸ் ஆக இருக்கும். இதுதான் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயலுக்கம் உள்ள வித்தியாசம் ஆகும். 


அந்த வகையில், தற்காலிக புயல் என்றால் இந்த வளிமண்டலத்தின் சுழற்சி வேகம் 34 - 47 நாட்ஸ் ஆக மாறி புயலாக வலுபெறும். மேலும், குறைந்த கால இடைவெளியிலேயே அதன் வேகம் மீண்டும் 28 முதல் 33 நாட்ஸ் ஆக குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். இதனாலேயே இதனை தற்காலிக புயல் என பாலச்சந்திரன் குறிப்பிடுகிறார். 


மேலும் நவ.30இல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் நகரத்தொடங்கியிருப்பதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
காலையில் இருந்து நகராமல் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 3 கி.மீ., வேகத்தில் நகரத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாகையில் இருந்து 320 கி.மீ., தொலைவிலும், சென்னையில் இருந்து 480 கி.மீ., தொலைவிலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


நாளை, நாளை மறுதினம் - எங்கெல்லாம் ரெட் அலர்ட்...?


செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழைம், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் நாளை (நவ. 28 ) பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


அதேபோல், நாளை மறுதினம் (நவ.30) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு நாளை மறுதினம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 


ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு ஆரஞ்ச் அல்ர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | பள்ளி மாணவர்களே... மாதம் 1000 ரூபாய் வேண்டுமா... இந்த தேர்வை எழுதுங்கள் போதும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ