வட கடலோர மாவட்டங்களுக்கான ’ரெட் அலர்ட்’ தொடரும்- வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உட்பட 12 மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இன்றும் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், இன்றும் நாளையும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் எனக் கூறினார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடி அதிகனமழைக்கு வாய்ப்பு (Regional Meteorological Centre, Chennai) இருப்பதாக கூறிய அவர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை (Heavy Rainfall) பெய்யும் எனத் தெரிவித்தார்.
ALSO READ | கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர் - அமைச்சர்
திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என புவியரசன் கூறினார். இவை தவிர ஏனைய பிற மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக. ஆவடி 20 செ.மீ, மகாபலிபுரம் 18 செ.மீ, கட்டப்பாக்கம் மற்றும் காஞ்சிபுரத்தில் 17 செ.மீ மழை பெய்துள்ளது
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்றும்,நாளையும் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 60 கிலோ மீட்டர் வரை வீசுவதற்கு வாய்ப்பு இருப்பதால், மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. வட கடலோர மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் தொடரும் எனவும் கூறியுள்ளது.
ALSO READ | லாரியையும் முந்திரியையும் கடத்தியவர்களை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த தமிழக போலீஸ் Hats Off
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR