ஆசிரியர்களின் கூடுதல் பணிச்சுமையை குறைக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
`எமிஸ்`(EMIS)-கல்வி மேலாண்மைத் தகவல் மையத்தின் மூலம் ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் ஏற்பட்டுள்ள இன்னல்களை தடுத்து நிறுத்தமாறு தமிழக அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
'எமிஸ்'(EMIS)-கல்வி மேலாண்மைத் தகவல் மையம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலைப்பளு காரணமாக ஆசிரியர்களால் கல்வி போதிக்க முடியாத நிலைக்கு ஆளாகி இருப்பதாகவும், பெண் குழந்தைகளும் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகளை மேற்கோள் காட்டி குறிப்பிட்டிருந்தவர், பள்ளிக் கல்வித் துறையில் தினம் ஓர் உத்தரவு என்று மாறி, மாறி வருவதால் ஆசிரியர்கள் பெருத்த இன்னல்களுக்கு ஆளாவதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க | எனக்கு என்டே இல்லை.. மாஸாக கம்பேக் கொடுக்கும் அன்னபூரணி அரசு அம்மா!
மேலும், கல்வி மேலாண்மைத் தகவல் மையம் எனப்படும் எமிஸ் பதிவு முறையினால் ஆசிரியர்களின் முக்கியமான பணியான கல்விப் பணியை மேற்கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். இது மட்டுமல்லாமல், மாணவ மாணவிகளின் உணவு விவரங்கள், மாணவிகளின் இயற்கை சார்ந்த விவரங்களை எல்லாம் 'எமிஸ்'(EMIS)மூலம் பதிவு செய்யச் சொல்லுமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிடுவது, ஆசிரியர்களுக்கு வேலைப்பழுவை அதிகரித்துள்ளதாக கூறினார். எனவே முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு தொடர்புடையோரை அழைத்துப் பேசி மாணவிகளின் இயற்கை சார்ந்த விவரங்கள் கேட்கப்படுவதைத் தடுத்து, ஆசிரியர்களின் வேலைபளுவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | தமிழகத்தில் கொரோனா மரணங்களுக்கு முற்றுப்புள்ளி - சாதித்த மருத்துவத்துறை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR