கடந்த வருட இறுதியில் அனைத்து செய்தி மற்றும் யூடியூப் சேனல்களிலும் பெரிய அளவு பேசப்பட்டவர் தான் அன்னபூரணி அம்மா. அதற்கு காரணம் அவரது வீடியோக்களும், ஜனவரி 1-ம் தேதி அவர் ஏற்பாடு செய்திருந்த அருள்வாக்கு அளிக்கும் நிகழ்ச்சியும் தான். பல சிக்கல்களுக்கு நடுவே சில வாரங்கள் காணாமல் போன அவர், தற்போது மாஸ் கம் பேக் கொடுக்க தயாராகியுள்ளார்.
மேலும் படிக்க | கொடைக்கானலில் பரவும் காட்டுத்தீ - தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்
என்னை நாடி வரும் குழந்தைகளுக்கு அருள் புரிவேன் என அன்னபூரணி சொன்ன வீடியோ பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்தது. பலரும் நாடி வந்த குழந்தைகளுக்கு அருள் வாக்கு சொல்லும் பராசக்தி அம்மா என்றெல்லாம் இவருக்கு அடைமொழி கொடுத்து முட்டு கொடுத்தனர். கலர் கலர் பட்டுப்புடவைகள், நகைகள் என கம்பீர தோற்றத்துடன் வைரலான இவர் வீடியோ ஆரம்பத்தில் யாராலும் கண்டு கொள்ளப்படவில்லை.
ஆனால் இதே அன்னபூரணி சில ஆண்டுகளுக்கு முன்பு சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் தனது கள்ளக்காதலன் அரசுக்காக லட்சுமி ராமகிருஷ்ணனிடம் நியாயம் கேட்க சென்ற வீடியோ வைரலானதும், பலரும் இவரை கலாய்த்து தள்ளினர். பக்தி பரவசத்துடன் அன்னபூரணி அருள் வாக்கு சொல்லும் வீடியோக்கள் காவல்துறை வரை சென்றது. இதனால் அன்னபூரணி ஏற்கனவே திட்டமிட்டிருந்த ஜனவரி 1-ம் தேதிக்கான திவ்ய தரிசனம் ரத்தானது.
மேலும் படிக்க | 2 கோடி லஞ்ச வழக்கில் சசிகலாவிற்கு முன் ஜாமீன்
அதன்பிறகு முகநூலில் மட்டும் வீடியோக்களை வெளியிட்டு வந்த அன்னபூரணி மீண்டும் மக்களை நேரடியாக சந்தித்து அருள் வாக்கு வழங்க திட்டமிட்டுள்ளார். அதன்படி சென்னை சுதானந்த ஆசிரமத்தில் அம்மா எனர்ஜி தரிசனம் என்ற பெயரில் அன்னபூரணி அருள் வாக்கு சொல்கிறார். இதற்கு செல்ல ஒரு நபருக்கு 700 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
விருப்பப்படும் நபர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த அறிவிப்பு பலரால் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. பலரும் இவரை கலாய்த்தும், சிலர் ஆர்வத்துடன் முன்பதிவும் செய்து வருகின்றனர். எத்தனை போலி சாமியார்கள் பிடிபட்டாலும் மக்கள் திருந்தாத வரை அன்னபூரணிக்கு அமோக வரவேற்பு தான்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR