மூத்த குடிமகன்களுக்கான ரயில் கட்டணச் சலுகை நிராகரிக்கப்பட்ட நிலையில்,  மீண்டும் கட்டணச் சலுகையைக் கொண்டு வாருங்கள் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணச் சலுகை மீள்வது குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் அளித்த பதில் கடிதத்தில், 2020 -21இல் ரயில்வே பயணக் கட்டணம் , 2019 -20ஐ ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்குதான் இருந்தது என்று கூறியுள்ளார். எல்லா பிரிவினருக்கும் சலுகை கட்டணம் வழங்குவது சாத்தியமல்ல என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் அமைச்சர் பதில் குரூரமானது என்றும், மீண்டும் கட்டணச் சலுகையைக் கொண்டு வாருங்கள் என்றும்  எம்.பி. சு.வெங்கடேசன் கேட்டுக்கொண்டுள்ளார். 


இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''அரசுக்கு இதயம் வேண்டும். மூத்த குடிமகன்களுக்கான ரயில் கட்டண சலுகை நிராகரிக்கப்பட்டுள்ளது. கட்டணச் சலுகை என்பது சமூகத்தின் நன்றிக் கடன் மட்டுமல்ல அவர்களின் உரிமையும் கூட. அவர்கள் விரல் பிடித்து இந்த தேசம் நடந்திருக்கிறது. அதை மறந்து அவர்கள் மீது அரசே உளவியல் தாக்குதலை நடத்துவது குரூரமானது'' என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | பெண்களை மதிக்கவில்லை என்றால்.. எச்சரிக்கும் தமிழிசை..!



மேலும் இது தொடர்பாக அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அதில், ''கோவிட் காலத்தில் நிறைய நாட்கள் ரயில்கள் ஓடவில்லை . ஆகவே வருவாய் குறைந்தது எல்லோரும் அறிந்ததே. அது போலப் பல குடும்பங்களும் வருவாயை , வேலைகளை இழந்தன . கோவிட் கால நிவாரணமாக மாதம் ரூ.7500 தாருங்கள் என்ற கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை . மூத்த குடிமக்களின் உளவியல் பாடுகள் சொல்லி மாளாது . தாங்கள் சுமையாகக் கருதப்படக் கூடாது என்ற அவர்களின் உணர்வுகள் மிக முக்கியமானவை.


அரசாங்கத்திற்கு இதயம் வேண்டும் .இதுபோன்ற கட்டணச் சலுகைகள் அவர்களுக்கு சமூகம் ஆற்றுகிற நன்றிக் கடன் மட்டுமல்ல அவர்களின் உரிமையும் கூட. இன்னும் அவர்கள் தாங்கள் நுகரக் கூடிய ஒவ்வொரு பண்டம் , சேவை மீதும் வரி செலுத்துகிறார்கள். வருமான வரி செலுத்துபவர்களும் உண்டு . கடந்த 6 மாதங்களாக முன்பைப் போல ரயில்கள் ஓட ஆரம்பித்தும் விட்டன.


அவர்கள் கை விரலைப் பிடித்து இந்த தேசம் நடந்திருக்கிறது. அமைச்சரே உங்கள் பதில் குரூரமானது. மறு பரிசீலனை செய்யுங்கள். மீண்டும் கட்டணச் சலுகையைக் கொண்டு வாருங்கள்'' என்று வலியுறுத்தியுள்ளார். 


மேலும் படிக்க |  கஞ்சா நகரமாக மாறுகிறதா வேலூர் - கைகொடுக்குமா ஆப்ரேசன் 2.0?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G