திருப்பூர் மாவட்டம் தாராபுத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தின் பேத்தி ஸ்மிர்த்தி மற்றும் அவரது தோழி மகதி ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா அளுநரும் புதுச்சேரி துணை நிலை அளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார்.அவருடன், இந்து முன்னணியை சேர்ந்த தலைவர்கள், பொதுமக்கள், பரதநாட்டிய ரசிகர்கள் என பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியை கண்டு ரசித்த தமிழிசை, அதில் பங்கேற்ற கலைஞர்களை பாராட்டி விருதுகளை வழங்கி கவுரவித்தார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழிசை சவுந்தரராஜன், எந்த சமூகம் பெண்களை மதிக்கிறதோ அந்த சமூகம்தான் வளர்ச்சி பெறும் என குறிப்பிட்டார்.
மேலும், நமது குழந்தைகளுக்கு நாட்டின் கலாச்சாரம், பண்பாடு குறித்து கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம் என கூறிய தமிழிசை, கல்வி மட்டும் ஒருவரை சிறந்த முறையில் வளர்த்தெடுக்காது எனவும் அதனுடன் ஏதாவது ஒரு கலையும் கற்றுக்கொள்வது அவசியம் எனவும் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
மேலும் படிக்க | அஜித் அரசியலுக்கு வர தயாராகிறார் - ஜெயலலிதாவின் உதவியாளர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR