பழனி அருகே உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் பாஜக சார்பில்  நடைபெறவிருந்த ரேக்ளா பந்தயம் தொடர்பாக காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களில் 5 பேரை காணவில்லை என்றும், அவர்களை போலீசார் கடத்தியுள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே உள்ளது முத்து நாயக்கன்பட்டி ஊராட்சி. இங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று பாஜக சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெறவுள்ளதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டு,  அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது. ரேக்ளா பந்தயத்தை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை (TN BJP Leader K.Annamalai) துவக்கி வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ரேக்ளா பந்தயத்திற்கு அனுமதி கேட்டு சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் பாஜக சார்பில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் 3ம் தேதி ரேக்ளா பந்தயத்தை நடத்திக் கொள்ள காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அனுமதி அளித்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் அனுமதி ரத்து செய்யப்படுவதாக போலீசாரிடம் தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரேக்ளா பந்தயத்தை நடத்த அனுமதி கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் நடத்திக் கொள்ள அனுமதியும் பெற்றுள்ளனர்.


மேலும் படிக்க | திமுகவின் வெற்றி பார்முலா... திருமா ஓகே சொல்ல என்ன காரணம்? - முழு விவரம் இதோ!


இதையடுத்து நாளை நடைபெற உள்ள ரேக்ளா பந்தயத்திற்க்கான ஏற்பாடுகளை பாரதிய ஜனதா கட்சியினர் தீவிரமாக செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு  சாமிநாதபுரம் காவல் ஆய்வாளர் தென்னரசு தலைமையிலான போலீசார் ரேக்ளா பந்தயம் நடைபெறும் இடத்தில் சென்று, செய்து வைத்திருந்த ஏற்பாடுகளை நிறுத்துமாறு நாளை ரேகா பந்தயம் நடத்தக்கூடாது என்றும் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நடக்கும் ரேக்ளா பந்தயத்தை ஏன் தடுக்கிறீர்கள் என்று பாஜக மாவட்ட துணைத் தலைவர் மகுடீஸ்வரன் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியினர் கேட்ட பொழுது இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.


இதை அடுத்து, பாரதிய ஜனதா கட்சியினரை கைது செய்து நெய்க்காரப்பட்டி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தற்போது அடைத்து வைத்துள்ளனர். இரவோடு இரவாக, ரேக்ளா பந்தயத்திற்காக செய்யப்பட்டிருந்த  ஏற்பாடுகள் அனைத்தையும் காவல்துறை அகற்றியதாக தெரிகிறது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட திண்டுக்கல் மேற்கு  மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் கூறிய போது, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணியின் தூண்டுதலின் பேரிலேயே போலீசார் இடையூறு செய்வதாகவும், நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட ரேக்ளா பந்தயம் தொடர்பாக லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து செய்யப்பட்ட ஏற்பாடுகளை காவல்துறையினர் அராஜகமாக அகற்றி உள்ளதாகவும் தெரிவித்தார். 


காவல்துறை அனுமதி அளித்து மீண்டும் அனுமதியை ரத்து செய்த நிலையில் நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெற்று சட்டரீதியாகவும், காவல்துறையின் நிபந்தனையை கடைபிடித்து முறையாக நடைபெற இருந்த ரேக்ளா பந்தயத்தை எவ்வித காரணமும் இன்றி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்த விடாமல் தடுத்துள்ளனர் என்றும், மேலும் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட 34 பேரில் 5 பேரை காணவில்லை என்றும், அவர்களை போலீசார் கடத்தி எங்க வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை எனவும் பாஜவினர் கூறினர்.


கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களை உடனடியாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் கூறினார்.மேலும்  இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக தெரிவித்தார். ரேக்ளா பந்தயம் நடைபெறும் என அறிவித்து பல்வேறு ஏற்பாடுகளை பாஜகவினர் செய்துள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனையால்  திட்டமிட்டபடி ரேக்ளா பந்தயம் நடைபெறுமா?  என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த சம்பவத்தால் அபப்குதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க | கொங்கு மண்டலத்தில் பாஜக கொடி பறக்குது, இந்த 5 தொகுதிகள் கன்பார்ம் - அண்ணாமலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ