வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடை பயணமாகவோ, பிற வாகனத்திலோ தன்னிசையாக செல்ல வேண்டாம் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு நடை பயணமாகவோ, பிற வாகனத்திலோ தன்னிசையாக செல்ல வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இது குறித்து முதல்வர் பழனிசாமி கூறுகையில்.... 'வெளிமாநில தொழிலாளர்கள் தற்போது தங்கியிருக்கும் முகாம்களிலேயே தொடர்ந்து பத்திரமாக இருக்க வேண்டும். அனைத்து வெளிமாநில தொழிலாளர்களும் படிப்படியாக அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். சுமார் 10 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்களை தினந்தோறும் அனுப்பிவைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மே 5 முதல் 15 ஆம் தேதி வரை 55,473 தொழிலாளர்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 43 ரயில்கள் மூலம் பிகார், ஒடிசா,ஆந்திரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் அனுப்பி வைக்கபட்டுள்ளனர்.  


தினந்தோறும் 10,000 புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரயில்வே கட்டணம் உள்பட அனைத்து பயணச் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார். 


இதை தொடர்ந்து தற்போது முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்... "முடி திருத்துவோர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு ஏற்கனவே இரு தவணைகளாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து முடி திருத்துவோர் நலவாரிய உறுப்பினர்களுக்கு தந்தது போல் நலவாரியத்தில் பதிவு செய்யாத முடி திருத்துவோருக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்" என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


முன்னதாக  உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார். முதல்வர் பழனிசாமி வெளியிட்ட இரங்கல் குறிப்பில், விபத்தில் புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக முதல்வர் கூறினார். மேலும், அந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதையும் அவர் கூயிருந்தது குறிப்பிடத்தக்கது.