மே 18 முதல் தனியார் மருத்துவமனைகளிலும் Remdesivir விற்பனை!
தமிழகத்தில் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் மே 18 முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக சுகாதாரத்துறை ஒன்றிணைந்து சென்னை உள்பட தமிழகம் (Tamil Nadu) முழுவதிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முயன்றாலும் தினமும் சுமார் 30,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் (Coronavirus) பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சனிக்கிழமை தமிழ்நாட்டில் 33,658 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த ஒற்றை நாள் தொற்று எண்ணிக்கையாகும். தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,65,035 ஐ எட்டியுள்ளது, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,07,789 ஆக உள்ளது என மாநில சுகாதார செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
ALSO READ | பரிதாபம்! கொரோனா வைரசால் 38 கர்ப்பிணிகள் பலி
இதற்கிடையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. அதில்., வரும் மே 18 ஆம் தேதி முதல், தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்து விற்பனை செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் மருத்துவமனைகள் தங்கள் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் விவரங்களோடு, மருத்துவ தேவைக்குறித்த விவரங்களை இணையத்தில் பதிவுசெய்யும் வசதி ஏற்படுத்தப்படும்.
மருத்துவமனைகளின் கோரிக்கைகள் பரிசீலணை செய்யப்பட்டபிறகு, அந்தந்த மருத்துவமனைகளுக்கான மருத்துவ பிரதிநிதிகள் மட்டும் அவர்களுக்கான விற்பனை மையங்களுக்குச் சென்று, அந்தந்த மருத்துவமனைக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், இதற்கான இணையதளம் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR