கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சி செயற்குழு நிர்வாகியான கல்யாணராமன், நபிகள் நாயகம் குறித்து அவதூறான வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதனை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அதனையடுத்து கல்யாணராமனை போலீசார் கைது செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் கல்யாணராமன் மீது புகார்கள் குவிந்ததால் அவர் மீது பல்வேறு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோவை மாவட்ட எஸ்.பியின் பரிந்துரையின் பேரில் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கடந்த ஆண்டு உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணையில் குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது உத்தரவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பாலாஜிக்கு எதிரான வழக்கு; அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்!


இதைத்தொடர்ந்து, இரு குழுக்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாகத் தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை கடந்த அக்டோபர்17ம் தேதி கைது செய்தது. கோபிநாத் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் கல்யாணராமனை இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கச் சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி மாதம் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரின் மனைவி சாந்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பின்.என்.பிரகாஷ், ஏ.ஏ. நக்கீரன் அமர்வு, கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.


மேலும் படிக்க | ’பைக்ரேஸ்’ வாலிபருக்கு வார்டு பாயாக பணியாற்ற உத்தரவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR