ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில், அவர் வயதை ஒத்த சிறுமிகளின் வாழ்க்கையைப் போல ஜி.மீனாவின் (G Meena) வாழ்க்கையும் சீராகச் சென்றுகொண்டிருந்தது. அவர் ஒரு அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். ஆனால் 2015 ஆம் ஆண்டு பிழைப்பைத் தேடி அவரது குடும்பம் திருப்பூருக்குச் (Tirupur) செல்ல முடிவெடுத்த பின்னர் அனைத்தும் மாறிப்போனது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படிப்பில் மீனா கெட்டிக்காரியாக இருந்தாலும், அவர் தெலுங்கு வழிக் கல்வியில் படித்ததால், அவருக்கு தமிழோ ஆங்கிலமோ தெரியாது. பூலுவாப்பட்டி அருகில் தெலுங்கு பள்ளிகள் எதுவும் இல்லாததால், அவரது பெற்றோர் அவரை 13 வயதிலேயே ஜவுளி ஆலையில் (Textile Mill) பணிக்கு அனுப்பினர்.


ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஒரு ஆங்கில வழிப்பள்ளியில் (English Medium) படித்து, பன்னிரெண்டாம் வகுப்புப் (Class 12) பொதுத் தேர்வுகளில் மீனா 600-க்கு 511 மதிப்பெண் வாங்கியுள்ளார்.


இது எவ்வாறு நடந்தது? மீனா வேலைக்கு சேர்ந்து மூன்று மாதம் ஆகி இருக்கும். தேசிய குழந்தைத் தொழிலாளி பிராஜெக்டைச் (NCLP) சேர்ந்த அதிகாரிகள் ஜவுளி ஆலையில் திடீர் சோதனை செய்து மீனா மற்றும் அவரைப் போன்ற இன்னும் பல குழந்தைகளைக் காப்பாற்றினார்கள்.


தான் பூலுவாப்படியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டதாகவும், NCLP அதிகாரிகள் தனக்கு தொடர்ந்து ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் பயிற்சி அளித்ததாகவும் அவர் தெரிவித்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஆந்திராவிலிருந்து வந்தாலும், ஆங்கிலத்திலும் தமிழிலும் தேர்வுகளை எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெற்றது பெருமை அளிப்பதாகவும் மீனா கூறினார்.


ALSOO READ: கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம்: TN Govt அறிவிப்பு


அவர் பத்தாம் வகுபிற்குள் நுழைவதற்குள் அவருக்கு தமிழும் ஆங்கிலமும் நன்றாக வந்துவிட்டது. 11 அம் வகுப்பில் அவர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்கப்பட்டார். காமர்ஸ் பிரிவில் சேர்ந்து படித்த அவர் 12 ஆம் வகுப்பி மிக நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.


கட்டிடத் தொய்லாளிகளாக பணிபுரியும் அவரது பெற்றோரின் மகிழ்ச்சிக்கு தற்போது அளவில்லை. மீனா வங்கித் துறையில் பணிபுரிய வேண்டும் என ஆசைப்படுகிறார்.


‘என் பெற்றோர் மாதத்திற்கு சுமார் 15,000 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நல்ல வீடையும் வசதிகளையும் அமைத்துத் தர வேண்டும் என்பது என் ஆசை’ என்று கூறுகிறார் இந்த சாதனைப் பெண்!!