வீரமரணம் அடைந்த பெரிய பாண்டியன் உடலுக்கு போலீசார் மரியாதை!!
நகை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானில் சென்ற மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி கொள்ளையர்கள் சுட்டதில் உயிரிழந்தார். மேலும் 4 தமிழக போலீசார் காயமடைந்தனர். அக்குழுவில் இடம்பெற்றிருந்த மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டு கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்தனர்

ராஜஸ்தான் மாநிலத்தில், கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது, தமிழக இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட தனி மேடையில் பெரியபாண்டியன் உடல் வைக்கப்பட்டது. அங்கு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன், டிஜிபி ராஜேந்திரன், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பெரியபாண்டியன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், முதல்வர் மற்றும் அதிகாரிகள் தங்களது கைகளில் கறுப்பு பட்டை அணிந்திருந்தனர்.