ஆன்லைன் ரம்மியினால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து கடந்த 10-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இக்குழுவில் தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கர ராமன், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே, உளவியலாளர் டாக்டர் லட்சுமி விஜயகுமாரர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இக்குழு தனது ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று அளித்தது. 71 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து 17 பேர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | தமிழக அரசை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்... எதற்கு தெரியுமா?


ஆன்லைன் விளையாட்டுகளால் திறன்கள் மேம்படுவதாக சொல்லப்படுவது தவறானது எனவும், ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத்தை கைவிட்டு, புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விளையாட்டுக்களால் பொதுமக்களின் உடல் நலம் பாதிக்கப்படுவதாகவும், இயல்பு நிலையில் வாழ்வதற்கு எதிராக ஆன்லைன் விளையாட்டுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது இயலாத ஒன்று என்பதால் அதை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் எனவும், ஆன்லைன் ரம்மி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டுமெனவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது.


மேலும் படிக்க | ஆன்லைன் ரம்மியால் சென்னையில் மற்றொரு தற்கொலை - தொடரும் அவலம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR