Armstrong Murder Case Latest News Updates: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கையே கேள்விக்குள்ளாக்கியது. மேலும், இந்த வழக்கு சிபிசிஐடி வசம் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் முதலில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது போலீசாரை தாக்கி தப்பி செல்ல முயற்சித்த திருவேங்கடம் என்ற ரவுடியை தற்காப்புக்காக என்கவுண்டர் செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது வரை சுமார் 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


தண்ணி காட்டும் சீசிங் ராஜா, சம்போ செந்தில்...


இந்த கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளான சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இருவருக்கும் நெருக்கமானவர்களை கண்டறிந்து, அவர்களின் மொபைல்களையும் ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம், சம்போ செந்திலுக்கு நெருக்கமானவராக அறியப்படும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் கொலை: தண்ணீர் காட்டும் சம்போ செந்தில்... மும்பையில் போலீஸ் முகாம்


அப்போது, மொட்டை கிருஷ்ணன் உடன் தொலைபேசியில் பேசியிருந்ததாக கூறி பிரபல இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது பரபரப்பை உண்டாக்கியது. எனினும், மோனிஷாவும் வழக்கறிஞர் என்பதால் வழக்கு ரீதியாகவே மொபைலில் பேசியதாக அவர் விசாரணையில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.  மொட்டை கிருஷ்ணனுக்கு மோனிஷா ரூ. 75 லட்சம் பணம் வழங்கியதாக தகவல் பரவிய நிலையில், அதனை மோனிஷா தரப்பு முற்றிலும் தவறான தகவல் என மறுப்பு தெரிவித்திருந்தது.  


பிரபல ரவுடி சஜித் கைது 


இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியும், பிரபல ரவுடியுமான சஜித் தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட்டுள்ளார்.


கொலை வழக்கு முதல் கஞ்சா விற்பனை வரை


கைது செய்யப்பட்ட சஜித் மீது ஆந்திராவில் ரவுடி சீசிங் ராஜாவுடன் சென்று இரட்டை கொலை செய்த வழக்கும், திண்டிவனம் அருகே பல லட்சம் ரூபாயை கொள்ளையடித்த வழக்கும் பிரபல ரவுடியும், பாஜக பட்டியல் அணி மாநில செயலாளருமான நெடுங்குன்றம் சூர்யாவின் தம்பி உதயா கொலை வழக்கும், தாம்பரத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளன. இதுமட்டுமின்றி பிரபல ரவடி சஜித் மீது பல்வேறு வழக்குகளும் உள்ளன.



காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ஆராமுதன் கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுடன் சஜித்திற்கு தொடர்பு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், கஞ்சா, போதை மாத்திரை விற்பனை போன்றவற்றிலும் சஜித் ஈடுபட்டு வந்ததும், அதற்கு அவரது மனைவி உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.


பறிமுதல் செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்கள்


கடந்த சில ஆண்டுகளாக ரவுடி சஜித் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி சீசிங் ராஜாவுடன், சஜித் தொடர்பில் உள்ளாரா, சீசிங் ராஜா இருக்கும் இடம் சஜித்துக்கு தெரியுமா என தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க உள்ளனர். 


சஜித்தை கைது செய்தபோது 3 கிலோ கஞ்சா, 6 பட்டா கத்தி, கஞ்சாவை அளந்து போடும் எடை இயந்திரம், 2 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சஜித்திடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களும் திருட்டு வாகனங்கள் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் கைது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ