விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அச்சின்னம், தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தல் நெறுங்கி வரும் நிலையில் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி மக்களவை தேர்தலில் மோதிரம் சின்னம் ஒதுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் கமிஷனில் மனு கொடுத்து இருந்தது.


இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிய சின்னம், தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வேறு சின்னம், தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படும் என தெரிகிறது.