திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்மாபட்டி கிராமத்தில் முருகானந்தம்-வளர்மதி தம்பதியினர் கடந்த 2013ம் ஆண்டு ஸ்ரீ மாயக்காரி மாசாணியம்மன் என்ற கோவிலை உருவாக்கி, தினந்தோறும் அதற்காக சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்து வந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கோவிலுக்கு அமாவாசை பவுர்ணமி, தேய்பிறை, அஷ்டமி ஆகிய தினங்களிலும் மற்றும் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் மதுரை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர்.


ALSO READ | டெல்டா- ஒமிக்ரானின் கலவை மாறுபாடால் உலகில் பதற்றம்


அதேபோல் மாதந்தோறும், அமாவாசை, பௌர்ணமி, தேய்பிறை, அஷ்டமி ஆகிய தினங்களில் மதிய அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு அந்த கோயில் நிர்வாக தம்பதியினருக்கு மாசாணி அம்மனின் அருள் வாக்கில், கொரோனோ (Coronoa Spread) மாரியம்மன் என்ற பெயரில் சிலை வைத்து வனங்கும்படி உத்தரவு வழங்கப்பட்டது. அதன்படி தனியாக கொரோனா மாரியம்மன் சிலை அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.




கொரனோ மாரியம்மனை பல பகுதிகளிலிருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்து சென்றால் கொரோனோ தொற்று (Covid Infection) உறுதியாக வராது என்று கோவில் பூசாரி தெரிவிக்கின்றார். அதனால் பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.


நாட்டையே உலுக்கி வரும் நிலையில் இந்த கொரோனோ தொற்று பரவாமல் இருக்க இங்குள்ள கொரோனோ மாரியம்மனை தரிசனம் செய்தால் நோய் தொற்று பரவாது என்று கோவில் பூசாரி உறுதியளித்து கூறுவது பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் கோவிலில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில் மற்ற தினங்களில் இந்த கோவில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகியும் பூசாரியும் ஆன முருகானந்தம் தெரிவித்தார்.


பிளேக் மாரியம்மன் கோவில்கள்
ஒரு காலத்தில் பிளேக் நோய் தீவிரமாக பரவியபோது, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பிளேக் மாரியம்மன் என்ற பெயரில் கோவில்கள் கட்டப்பட்டன. மாரி என்பது மழை மற்றும் நோய் என்ற பொருள் தரக்கூடியது. எனவே ஏதாவது ஒரு கொடூர நோய் பரவினால் அதை தீர்க்க மாரியம்மன் உதவி செய்வாள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. அப்படித்தான் இப்போது கோவையை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்திலும் கொரோனா மாரியம்மன் என அம்மனுக்கு பெயரிடப்பட்டுள்ளது என்கிறார்கள், சமய ஆய்வாளர்கள்.


ALSO READ | ஊரடங்கு: கோவையில் முழு அடைப்பு, வெறிச்சோடிய சாலைகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR