பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த பிக்பாஸ் இரண்டாம் பாகத்தின் டைட்டில் வின்னராக ரித்விகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல சர்ச்சைகளுடன் தமிழக தொலைக்காட்சி பிரியர்களை கவர்ந்த பிக்பாஸ்-2 ல் இறுதியாக பட்டத்துக்கு காத்திருந்த விஜயலக்ஷ்மி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகிய மூவரில் ரித்விகா பிக்பாஸ் பட்டம் வென்றுள்ளார்.


பல கோடி ரசிகர்களை கொண்டுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றை தினம் ஒருவழியாக முடிவினை எட்டியது. கடந்த வாரம் ஜனனி ஐயர் வெளியேற்றப்பட்டதை அடுத்து பிக்பாஸ் பட்டத்திற்காக அவரை தொடர்ந்து, ஐஸ்வர்யா, ரித்விகா மற்றும் விஜயலக்ஷ்மி ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் காத்திருந்தனர்.


இந்நிலையில் போட்டியின் கடைசி நாளான நேற்று முதல் போட்டியாளரை வெளியேற்ற  பிக் பாஸ் சீசன் 1-ன் வெற்றியாளர் ஆரவ் வரவழைக்கப்பட்டார். அவர் விஜயலக்ஷ்மியை அழைத்து வந்து எலிமினேட் ஆனதாக உறுதி செய்தார். அதன்பின், முதல் சீசனில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஓவியா வந்தார். ரசிகர்களின் கேள்விக்கு பதில் சொன்ன ஓவியா, இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் பார்க்கவே இல்லை என கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.


தொடர்ந்து வெற்றியாளரை அழைத்து வர கமல் உள்ளே சென்று ரித்விகா மற்றும் ஐஸ்வர்யாவை வெளியே அழைத்து வந்தார். பின்னர் ரித்விகா வெற்றி பெற்றதாக அறிவித்தார்.