சென்னை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜல்லிக்கட்டுக்கு நடத்த அனுமதி கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக இளைஞர்களும், மாணவர்களும் தெருவில் இறங்கி போராடம் நடத்தி வருகின்றனர்.


சமீபத்தில் இந்தியா டுடே நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கில் ஜல்லிக்கட்டு பற்றிய விவாதம் நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு, சுஹாசினி, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் பங்கேற்று பேசினர். 


அப்போது கருத்து தெரிவித்த கிரண்பேடி:-


நான் ஜல்லிக்கட்டை தொலைக்காட்சியில்தான் பார்த்துள்ளேன். துள்ளி ஓடும் மாடுகளை, வாலிபர்கள் துன்புறுத்துவதை பார்த்தேன். காளைகளை அடக்குகிறேன் என்று கூறி மாட்டின் வாலை அவர்கள் பிடித்து இழுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனவே ஜல்லிக்கட்டிற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது சரியான ஒன்றுதான் என்றார்.  தமிழர்களின் கலாச்சாரமாக இருந்தாலும் ஜல்லிக்கட்டை நடத்தக் கூடாது என்றார். 


கிரண்பேடியின் பேச்சுக்கு பதிலளித்த ஆர்.ஜே.பாலாஜி:-


கேராளாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் யானை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன் காலில் சங்கிலி போட்டு கட்டி வைத்துள்ளனர். யானைகள் சந்தோஷமாகவா அங்கே நிற்கின்றன?


ஒட்டகம் பாவம் இல்லையா! அதேபோல், டெல்லிக்கு மிக அருகில் உள்ள குஜராத்தில், ஆயிரக்கணக்கான சுமைகளை ஒட்டகத்தின் மீது ஏற்றுக்கிறார்கள். அது ஏன் தடை செய்யப்படவில்லை. ஏன் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டின் மீது மட்டும் கை வைக்கிறீர்கள்? 


நான் கோர்ட்டை மதிக்கிறேன். ஆனால், ஜல்லிக்கட்டு மீதான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தவறு என நான் கருதுகிறேன். அப்படி பார்த்தால், தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தான் தீர்ப்பளித்தது. ஆனால், கர்நாடக மாநிலம் அதை ஏற்கவில்லை. எந்த நீதிமன்றமும் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே என்று கிரண்பேடியை கேட்டார். 


ஜல்லிக்கட்டை பற்றி பேசிய ஆர்.ஜே. பாலாஜியின் வீடியோ சமூக வலைத்தளங்கல்ளில் வைரலாகி வருகின்றது.