ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டெப்பாசிட் இழக்கும் பிரதான கட்சிகள்!
ஒரு வேட்பாளர் டெபாசிட் பெறவேண்டுமெனில், பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்கினைப் பெறவேண்டும், அதாவது 29,481 வாக்குகள்!
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது.
கடந்த டிச., 21 ஆம் நாள் நடைப்பெற்ற இந்த இடைத்தேர்தலில் 1,76,885 வாக்குகள் பதிவாகின. இன்று (டிச., 24) காலை 8.00 மணியளவில் துவங்கியது. ஆரம்பம் முதலே சுயேட்சை வேட்பாளர் தினகரன் முன்னிலை வகித்து வருகிரார். கிட்டத்தட்ட 30000 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி முன்னிலையில் இருக்கின்றார். மற்ற வேட்பாளர்கள் டெப்பாசிட் பெருவார்களா என்பதே கேள்விகுறியாக உள்ளது.
மொத்தம் 1,76,885 வாக்குகள் பதிவாகியுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு வேட்பாளர் டெபாசிட் பெறவேண்டுமெனில், பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்கினைப் பெறவேண்டும். அதாவது 29,481 வாக்குகள் பெற்றால் தான் டெபாசிட் தொகை கிடைக்கும்.
ஆனால் திமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு இதுவரை இந்த வாக்குகள் கிடைக்கவில்லை. எனவே இவர்களின் டெப்பாசிட்???
15-வது சுற்று முடிவில்...
தினகரன் 72518
அதிமுக 39029
திமுக 20493
நாம் தமிழர் 3316
பாஜக 1126