ஆர்.கே.நகர் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: 73.45% வாக்கு பதிவு!
நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இன்று நடைபெற்றது. 5 மணியுடன் வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்ததால், 5 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிகளுக்கு வந்த அனைத்து வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 258 வாக்குச்சாவடிகளில், காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வந்தனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 5 மணிக்கு முன், வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாலை 5-மணி வரை 73.45% வாக்கு பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
பின்னர் வாக்கு இயந்திரத்தை சீல் செய்து பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.
இதையடுத்து, மொத்தம் 59 வேட்பாளர் களத்தில் இறங்கினர். இதில் யாருக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று தெரியவில்லை. வருகின்ற 24-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெளியிடுவதாக தெரிவித்துள்ளனர்.