ஆர்கே நகர் தேர்தல்: இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
இரட்டை இலையை மீட்க, இரட்டை இலையை எதிர்த்து, ஆர்கே நகர் தேர்தலில் தினகரன் போட்டியிடுகிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
இரட்டை இலை சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரமாண பத்திரங்கள், எம்எல்ஏக்கள்,எம்.பி.,க்கள் ஆதரவு அடிப்படையில் இந்த முதிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து இன்று ஆர்கே நகர் இடை தேர்தல் தேதியும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று தனது ஆதர்வாளர்களுடன் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன் கூறியது, ஆர்கே நகர் தேர்தலில் தான் தொப்பி சின்னத்தில் போட்டியிடப் போவதாகவும், இரட்டை இலையை மீட்க, இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட வேண்டிய சுழல் ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சட்டப்படி மீட்போம். ஆட்சி மன்றக்குழுவில் தன்னை வேட்பாளராக தேர்தெடுத்ததுக்கு நன்றி கூறினார்.