சாலைகள், மேம்பாலங்கள் என அரசின் திட்டங்கள் ஏலம் விடப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் தலைமையில் மக்களுக்கான சாலைகள் போடப்படுகிறது. அது தரமாக இருக்க வேண்டும் இல்லையா ?. ஆனால், கட்சிகளை கைக்குள் போட்டுக்கொண்டு சாலை போடுகிறோம் என்ற பெயரில் அவர்கள் செய்யும் அட்டூழியத்துக்கு அளவே இல்லாமல் போகும் சூழல் நிலவி வருகிறது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட ராசிபுரம் அருகே உள்ள சாலையில் லட்சணத்தை பொதுமக்களே கேள்வி கேட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடிதான் - ராஜன் செல்லப்பா அதிரடி


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் முனியப்பன் பாளையம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில தினங்களாக சாலையில் சாக்கடைக் கால்வாய் மேல் பகுதியில் காங்கிரட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திரா காலனி பகுதியில் கான்கிரீட் அமைக்கும் போது சாலையில் இருந்த அடிப்பம்பை அகற்றாமல் அலட்சியமாக அப்படியே போடப்பட்டுள்ளது. 


மேலும் காங்கிரட் அமைக்கும் ஒப்பந்த பணிகளை அதிமுகவைச் சேர்ந்த மதியழகன் என்பவர் மேற்கொண்டு வருகிறார். அடி பம்பை அகற்றாமல் அப்படியே காங்கிரட் போடப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் கேட்டதற்கு ஒப்பந்ததாரர் அலட்சியமாக பதில் கூறியதாகக் கூறப்படுகிறது. 


மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அடிபம்பு மூலம் குடிநீர் எடுத்து வந்தோம். சிறிய கோளாறு காரணமாக அடிப்பம்பை சரி செய்யாமல் அப்படியே விட்டு விட்டோம். இதுகுறித்து  ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது வேறு ஒரு குடிநீர் குழாய் மூலம் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என கூறினார். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. சரி, இருக்கும் அடி பம்பையாவது சீர்செய்து தர வேண்டாமா ? அதையும் அகற்றாமல் அலட்சியமாக அப்படியே கான்கிரட் சாலையை போட்டுள்ளார்கள். 


அலட்சியமாக சாலையை போட்ட ஒப்பந்ததாரர் மதியழகன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் சாலையை செப்பனிட்டு நல்ல தரமான சாலையை போட்டுத்தர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | தூத்துக்குடி துப்பக்கிச் சூடு சம்பந்தமான அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிடுக! : தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ