நகைக்கடையில் கொள்ளை : நகைகளை சூறையாடிய திருட்டு கும்பல்!
தாம்பரம் அருகே நகைக்கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் கௌரிவாக்கம் பகுதியில் ப்ளூ ஸ்டோன் என்ற தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இங்கு நேற்று (நவ. 25) இரவு வழக்கம் போல வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்,
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் கடையின் ஊழியர் ஜெகதீஷ் என்பவரின் செல்போனுக்கு எச்சரிக்கை ஒலி அடித்துள்ளது. அதன் பின்னர் அவர் சுமார் ஆறு மணிக்கு மேல் எச்சரிக்கை ஒலி அடித்தது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் அங்கு வந்த போலீசார் கடையின் ஊழியர்கள் உதவியுடன் கடையை திறந்து பார்த்தபோது கடையின் உள்ளே கடையின் சுவர்களில் உள்ள கபோர்டுகளில் டிஸ்ப்ளேக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னர் சம்பவ இடத்திற்கு பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் ஜோஸ் தங்கையா, சேலையூர் உதவி ஆணையர் முருகேசன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டு கடையில் உள்ளே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து அதில் பதிவாகியுள்ள கொள்ளையரின் அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கொள்ளை தொடர்பாக காவலர்கள் ஒருவரை விசாரித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | சென்னை முக்கிய சாலையில் 15 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்: பீதியில் மக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ