மாங்காடு அருகே சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்...!!
மாங்காடு அருகே வீட்டில் வளர்த்த நாயை நடை பயிற்சி அழைத்து சென்ற போது சிறுவனை கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாங்காடு அடுத்த பொழுமணிவாக்கம் சார்லஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் இவரது மனைவி எலிசபெத் இவர்களுக்கு துஜேஷ் (11), என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர் நேற்று வீட்டின் வெளியே துஜேஷ் சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தார்.
இந்நிலையில், அவரது வீட்டின் எதிரே வசியக்கூடிய கார்த்திக் என்பவர் அவரது வீட்டில் வளர்க்கக்கூடிய ராட்வீலர் என்னும் நாயை நடை பயிற்சிக்கு அழைத்துச் சென்ற நிலையில் திடீரென வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை பார்த்து அந்த நாய் எகிறியதால் அருகில் இருந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதில் அந்த நாய் விளையாடி கொண்டிருந்த துஜேசை கடித்ததில் அவரது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு சிறுவன் ரத்த வெள்ளத்தில் அலறினார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த நாயை இழுத்து பிடித்த நிலையில் காயம் அடைந்த சிறுவனை பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்த நிலையில். சிறுவன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சென்னையில் கடந்த சில மாதங்களாக சாலையில் நடந்து செல்பவர்கள் மீது மாடு முட்டுவதும் நாய் கடித்து குதறுவதும் அரங்கேறி வரும் நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் வீட்டில் வளர்க்கக்கூடிய நாய்களுக்கு உரிய அனுமதி வாங்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்தது ஏன்? வரலாறும் பின்னணியும்
ஆனால் தற்போது இந்த பகுதியில் வளர்க்கக் கூடிய நாய்களுக்கு முறையான அனுமதி பெறாமல் வீட்டில் வளர்த்து வருவதாகவும் சிறுவர்கள் விளையாடக்கூடிய நேரத்தில் தெருவில் நாய்களை அழைத்துச் செல்வதால் மேலும் பல அசம்பாவிதம் நடைபெறும் எனவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வீட்டில் வளர்த்த நாய் சிறுவனை கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ